அம்பாறையில் இன்று (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையிலி் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பாறை, தமன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.