நாட்டில் அடுத்த வாரமளவில் 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர்,
“நாளை (24) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டாலும், அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீட்டிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்தச் செயன்முறையை தொடர முடியும்.
அதன் பின்னர் நிச்சயமாக 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.