கொள்ளுப்பிட்டியில் உள்ள விபச்சார விடுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பா என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 32 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் கோனவில, பண்டாரவளை, கொதட்டுவ, ஓபநாயக்க, அதுருகிரிய, அத்திடிய, கஹவத்தை, கடுகன்னாவ, மாத்தறை மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)