கடந்த 2021 டிசம்பரில் இழுவை படகில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் தொடர்பில் தேடப்பட்டு வரும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பல நாள் இழுவை படகில் இருந்து கிட்டத்தட்ட 290 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது, சம்பவத்தின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இலங்கைக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தலில் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளதாக சந்தேக நபர்கள் இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த போதிலும், அவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோனபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான விதானகே நிராஷ் சானுக வைத்தியசேகர வீரசிங்க (Vithanage Nirash Chanuka Vaidyasekara Weerasinghe) மற்றும் 32 வயதான லொகு என அழைக்கப்படும் கல்மங்கொட குருகே திலீப் சமீர சந்தருவன் (Galmangoda Guruge Dileep Sameera Sandaruwan) ஆகிய இருவருமே இவ்வாறு தேடப்பட்டு வருபவர்கள்.
இவ்விரு நபர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், 071- 8592727 அல்லது 011- 2343333 - 4 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)