20 இற்கு ஆதரவழித்தோரால் ஒட்டுமொத்தமாக அழியப்போகும் முஸ்லிம் அரசியல் பலம், தக்க வைத்துக் கொள்ள என்ன வழி?

20 இற்கு ஆதரவழித்தோரால் ஒட்டுமொத்தமாக அழியப்போகும் முஸ்லிம் அரசியல் பலம், தக்க வைத்துக் கொள்ள என்ன வழி?

ஆரம்ப காலத்திலிருந்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் பெரும்பான்மை மக்களுடன் கூட்டிணைந்து புத்தி சாதுரியமாக தக்க வைத்துக் கொண்ட முஸ்லிம் அரசியல், பலம் தனித்துவம், தனியுரிமை என்ன என விஸ்வரூபமாக உருவெடுத்து முஸ்லிம்களை கூறுகளாகப் பிரித்து, தேசிய அரசியல் நீரோட்டித்தில் இருந்து முஸ்லிம்களை பிரித்து, நாட்டில் இனவாத சந்தர்ப்பவாதிகளுக்கு அவர்களின் இலக்கை அடைந்து கொள்ள கை கொடுத்ததை அரசயல் வரலாறு ரீதியாக நாம் உணர்ந்துள்ளோம்.

இந்த அடிப்படையில் தனித்துவம், தனியுரிமை என தலையெடுத்த முஸ்லிம் கட்சிகள், இறுதியில் தங்கள் சுயநலத்திற்காகவும் வரப்பிரசாதங்களுகாவும் துண்டுகளாகவும், துருவங்களாகவுகும் பிரிந்து ஊருக்கு ஒரு கட்சி வீட்டுக்கு ஒரு கட்சி, ஆளுக்கு ஒரு கட்சி என சுயநலவாதிகளால் துண்டாடப்பட்டது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், தனித்துவம் என்னும் போர்வைக்குள் மறைமுகமாக ஒளிந்திருந்த இவர்களின் வேஷம், கடந்த காலங்களில் நாட்டில் நடந்த அதிகார திருத்தங்களின் மூலம் வெளிப்பட்டது. தலைமைகளுக்கும் சீடர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி நிலை இன்னொரு முஸ்லிம் கட்சி என்ற பெயரில் உருவாகும் நிலையை அடைந்துள்ளது.

இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் பலத்தை இல்லாதொழிக்க வேண்டும் என திட்டம் தீட்டி செயல்படும் சில சக்திகளுக்கு உரம் போடும் வகையில் இவர்களின் செயல்கள் அமைந்துள்ளன.

கடந்த 20ஆம் திருத்தச் சட்ட மூலத்தில் சமூகத்தை மறந்து சலுகைகளுக்காக ஆதரவளித்த முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள், தற்போது ஒன்றாக கூட்டிணைந்து இன்னொரு முஸ்லிம் கட்சியை ஆரம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக சில அரசியல் முக்கியஸ்தர்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

கடந்த காலங்களில் இதற்கான பேச்சு வார்த்தை ஆளும் கட்சியில் உள்ள சில முஸ்லிம் உறுப்பினர்களின் ஆசீர்வாதத்துடன் ரகசியமான முறையில் நடந்த போதிலும், இது தற்போது இறுதி நிலையை அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்காக  இவர்களுக்கு அதிகார தலைமைகளின் மூலம் பல பதவிகளும் சலுகைகளும் வழங்கப்பட இருப்பதாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே சீரழிந்து சிதைவடைந்து சின்னாபின்னமாகி இருக்கும் முஸ்லிம் அரசியல் பலம், இதன் மூலம் அடியோடு அளிக்கப்படும் என்பதே உண்மை.

முஸ்லீம் கட்சியின் ஆரம்ப கால உருவாக்கத்தில் சுமார் 12 முதல் 14 வரையிலான உறுப்பினராக உருவெடுத்து இலங்கையில் பலம் பொருந்திய சக்தியாக உருவெடுத்த முஸ்லிம் அரசியல், ஆசை மோகம், அதிகார மோகம் என பல துருவங்களாக சிதறி ஆரம்பத்தில் இருந்ததில் 50% வீதத்தை கூட பெற்றுக்கொள்ள முடியா நிலை அடைந்துள்ளது.

மேலும் இது இன்னும் பல கட்சிகளாக சிதறடிக்கப்படுமாயின், முஸ்லிம் என்ற நாமத்தில்லாவது ஒரு முஸ்லிம் கூட இலங்கை அரசியலில் பங்கு கொள்ள முடியாத நிலை உருவாக்கும். கடந்த காலங்களில் தனிச் சிங்கள அரசாங்கம் எனும் கோசத்தில் தேசிய அரசியலில் இருந்து முழுமையாக முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டதை நாம் கண்டோம். மேலும் முஸ்லிம் அரசியல் மட்டத்தில் சுயநலவாத அரசியல் வாதிகளால் தொடரந்தும் வெடிப்புக்களும் பிளவுகளும் ஏற்படுமாயின் இலங்கையில் முஸ்லிம் அரசியல் பலம் அடியோடு அளிக்கப்படுவதோடு சாதிகாரர்களின் சதிகளும் வெற்றியளிக்கும்என்பதே உண்மை.

தற்போது நாட்டில் பெரும்பான்மை மக்கள் சகல சூழ்ச்சிகளையும் இனவாத அரசியலையும் இனங்கண்டு கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டில் இனவாதமும் இனவாத அரசியலும் பெரும்பான்மை மக்களால் ஒதுக்கப்படும் நிலைக்கு மக்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளனர்.

எனவே முஸ்லிம் சமூகம் தொடர்ந்து மாறி மாறி வரும் இவ்வாறான குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் வாதிகளின் அரசியலுக்கு துணை போய், முஸ்லிம் சமூகத்தின் பலத்தை இழந்து விடாமல் தேசிய கட்சிகளினுடன் இணைந்து, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து இல்லாதொழிக்கப்பட்ட அரசியல் பலத்தை பெற்றுக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாகும்.

எனவே முஸ்லிம் சமூகம் இவ்வாறான அரசியல் வியாபாரிகளுக்கு தொடர்ந்தும் இரையாகாமல், துரோகத்தனமான, சுயநலவாத சமூகப்பற்ற்ற அரசியலுக்கு இடமளிக்காமல், எதிர்வரும் காலங்களில் எந்தக் கட்சி ஆட்சிபீடம் ஏறினாலும் தேசிய அரசியலில் இணைந்து ஆட்சியை தீர்மானிக்கும் பலம் பொருந்திய சக்தியாக அரசியலில் காலூன்ற சந்தர்ப்பத்தை அமைத்துக்கொள்வதே

இலங்கை முஸ்லிம்களுக்கு உள்ள ஒரே ஒரு வழியாகும்.

(பேருவளை ஹிலமி)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.