நிலைமை மோசமாகும் பட்சத்தில் ரயில்கள் ஸ்தம்பிக்க நேரிடலாம் என்றார்.
மேலும் பல நாட்களாக நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கான நிதியை வழங்குமாறு மத்திய வங்கிக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எரிபொருளை இறக்குவதற்கு தேவையான டொலர்கள் வழங்கப்படாவிடின் அடுத்த வாரத்திற்குள் நாட்டில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் இல்லாமல் அல்ல அரை நாள் மின் துண்டிப்பு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.
சுமார் 50% தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)