பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் நேர கைக்குண்டை பொருத்திய பிரதான சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரிடம் வெடிகுண்டு வைப்பதற்காக நபர் ஒருவர் ரூ. 50,000 இனை வழங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குற்றவாளியை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
வெடிகுண்டு வைத்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர் மற்றும் அதற்கு உதவிய, உறுதுணையாக, பணம் வழங்கியவர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)