கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தேகநபர் நேற்று (24) கந்தரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இன்று (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)