சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடமை விடுப்பு தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குழு தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் மேற்பார்வையில் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று (24) இரவு 11.00 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் மேற்கொண்ட தொடர் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் OIC மற்றும் மூவர் காயமடைந்து தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (யாழ் நியூஸ்)