இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை 210 ரூபாவாக அதிகரித்துள்ளது.
புதிய விலை உயர்வால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். 144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.