அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (21) காலை 08.00 மணி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனினும் அவசர சேவைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக மருத்துவமனைகளில் வேலை நிறுத்தம் செய்யப்படவில்லை. (யாழ் நியூஸ்)