பசிலுக்கு பிரதமர் பதவி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசிலுக்கு பிரதமர் பதவி?


ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பல வருடங்களாக பி.பி.ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகளை தாம் பலமுறை அம்பலப்படுத்தி வந்த போதிலும் அவருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை இன்று ஜனாதிபதியின் செயலாளராக நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


advertise here on top

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலினதும் பல ஊழல் மோசடிகள் உள்ளதாகவும், சிஐஏ உளவாளி ஒருவர் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து கப்ராலின் சம்பளத்தை எந்தவித அனுமதியும் இன்றி செலுத்தியதாகவும் அவர் கூறினார்.


இந்நிலையிலும், பி.பி ஜயசுந்தர மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் மீது சட்டம் அமுல்படுத்தப்படாமை ஆச்சரியமளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் தற்போதைய சூழ்நிலையில், பசில் ராஜபக்ஷ கோரும் எதையும் நிறைவேற்றும் நிலையில் ஜனாதிபதி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதன்படி பசில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அவர் கூறுகிறார்.


அலுவலக வேலைகளை தேங்காய் பறிக்கும் தொழிலாளியிடம் ஒப்படைத்தால் எப்படி செய்ய முடியாதோ அதேபோல் பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ நிறைவேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இன்று நாடு சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது முழு நாட்டையும் சீனா கையகப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


உலக வல்லரசாக கனவு காணும் சீனா, எதிர்காலத்தில் இலங்கையை யுத்த மூலோபாய மையமாக பயன்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.


இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவற்றை கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.