தகாத வார்த்தைகளால் பிக்குகளை திட்டிய ஒலிப்பதிவு தொடர்பில் ஞானசார தேரரின் தெளிவுபடுத்தல்!

தகாத வார்த்தைகளால் பிக்குகளை திட்டிய ஒலிப்பதிவு தொடர்பில் ஞானசார தேரரின் தெளிவுபடுத்தல்!


பௌத்த பிக்குமார் இருவரை தொலைபேசியின் ஊடாக தகாத வார்த்தைகளால் திட்டியமை சம்பந்தமாக கலகொட அத்தே ஞானசார தேரர் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.

சிங்கள வானொலி ஒன்றில் ஒலிப்பரப்பான கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட ஞானசார தேரர், "எவரையாவது திட்டும் தேவை இருந்தால், திட்டுவேன்" எனவும் கூறியுள்ளார்.

"இது தனிப்பட்ட விடயம்; இவை அனைத்து திட்டமிட்டு நடக்கின்றன. முகநூல், யூடியூப் வலையொளித்தளம் என்பன பொலிஸோ, நீதித்துறையோ அல்ல.

பௌத்த மத குருமாரை இஸ்லாமிய தீவிரவாதிகளாகவும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளாகவும் கட்டமைக்க சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.

தீவிரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நான் உட்பட பிக்குமாரை மதத் தீவிரவாதிகளாக முத்திரை குத்துகின்றனர்" எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் பிக்கு” என்ற எண்ணக்கருவை சமூகமயப்படுத்தியமை சம்பந்தமாக ஞானசார தேரர், மினிபுர தபோவனவாசி ரதன தேரர் மற்றும் கிருளபன தம்ம விஜய தேரர் ஆகியோர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டும் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.