எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் இணையத்தள சுகாதார விஞ்ஞாபனத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆவனம், கடுவுச்சீட்டில் கோவிட்-19 க்கு முந்தைய எதிர்மறை சோதனை அறிக்கை தரவுப் பக்கம் போன்றவற்றைச் சேர்ப்பது கட்டாயமாகும்.
பின்னர் அதில் வழங்கப்படும் QR குறியீட்டை மொபைல் அல்லது ஃபிளாஷ் டிரைவில் கொண்டு வருவதும் கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)