பாகிஸ்தான் - சியால்கோட் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
சில்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரியந்த குமார கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்த வேண்டும்.
பிரியந்த குமார மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டதாகவும், எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரிகள் வழக்கை இழுத்தடிக்காமல் இருப்பதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை 2-3 வாரங்களில் இலங்கை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கூற வேண்டும் என்றார்.
ஜனாதிபதி உத்தரவாதத்தை வழங்கத் தவறினால், பொதுமக்கள் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் இதுவரை மிகவும் பொறுமையாக இருந்து வருவது பாராட்டுக்குரியது என்றார். (யாழ் நியூஸ்)