மக்களின் நாடித் துடிப்பை சரியாக அறிந்து கொள்ளாத ஒருவர் அரசியல்வாதியாக இருக்க முடியாது எனவும் அவ்வாறான ஒருவரால் நாட்டை ஆள முடியாது எனவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காமல் நாடு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் வழக்கமான கலந்துரையாடல்கள் இன்றி எந்தவொரு தலைவராலும் ஒரு நாட்டை ஆள முடியாது எனவும் அப்போது இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார்.
நெருக்கடியில் உள்ள பிரச்சினைகளின் ஆழத்தை தலைவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்கள் தற்போது அரசாங்கத்தை வெறுத்துள்ளதாக தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஒவ்வொரு அரசாங்கமும் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொண்டு பலவந்தமாக அகற்றப்பட்டதை வரலாறு நிரூபிப்பதாகத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)