இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயு மாதிரிகள்!

இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயு மாதிரிகள்!


சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களினால் நுகர்வோர் அச்சம் கொண்டுள்ளமை நியாயமானது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். தற்போதைய பிரச்சினைக்கு அறிவியல்பூர்வமாக தீர்வு காண்பது அவசியமாகும். எரிவாயு சிலிண்டருடன் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களில் காணப்பட்ட பிரச்சினை தற்போது சிலிண்டர் பிரச்சினையாகி விட்டது.


இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மாதிரிகளை இந்தியாவில் உள்ள ஆய்வு கூடத்துக்கு பரிசோதனை நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளோம். மூன்றாம் தரப்பினரிடமிருந்து அறிக்கை பெறுவது அவசியமாகும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஸார ஜயசிங்க தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எரிவாயு சிலிண்டருடன் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களில் காணப்படும் பிரச்சினை தற்போது சிலிண்டரின் பிரச்சினை என்ற அளவுக்கு நிலைமை எல்லை கடந்துள்ளது.


கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன.ஆனால் அப்போது இந்தளவுக்கு கவனம் செலுத்தப்படவில்லை. தற்போது அதிகம் கவனம் செலுத்தப்படுவது நன்மையானதே என்றும் அவர் தெரிவித்தார்.


-இராஜதுரை ஹஷான்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.