ஸஹ்ரானின் மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

ஸஹ்ரானின் மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!


கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் பிரதிவாதியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை நீதிமன்றில் பிரசன்னப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல்களையடுத்து அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர், வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.