புத்தளம் பகுதியில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம் - மக்கள் பதற்றத்தில்!

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம் - மக்கள் பதற்றத்தில்!

புத்தளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியெரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொ்ர்பில் மேலும் தெரியவருகையில்,

புத்தளம் தில்லையடி பகுதியில் உள்ள இரவு நேர ஹோட்டலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

தில்லையடி பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு எடுத்துச் செல்வதற்காக சென்ற நபர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.

ஹோட்டலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உணவு வாங்கிக் கொண்டு பயணிப்பதற்காக மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்துள்ளார்.

இதன்போதே, மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஹோட்டல் உரிமையாளர், பணியாளர்கள், ஹோட்டலிற்கு சென்றிருந்தவர்களும் இணைந்து சில நிமிடங்களில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும், மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளது. எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.