திருட்டு மாடுகளுடன் கைதான இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய நபர்!

திருட்டு மாடுகளுடன் கைதான இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய நபர்!

லுணுகம்வெஹெர பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் திருட்டு மாடுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹம்பாந்தோட்ட-லுணுகம்வெஹெர பகுதியில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை திருட்டு மாடுகளை ஏற்றிய இரண்டு சுமை ஊர்திகளுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருட்டு மாடுகளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும் போதே, சந்தேக நபர் லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடுகளை விடுவித்து மக்களுக்கு வழங்க கொண்டு செல்வதாக சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை அகிம்சை மகா சங்கத்திற்கு அறிவித்து, அதன் தலைவரிடம் பெறப்பட்ட நன்றிக் கடிதத்தையும் சந்தேக நபர், காவல்துறையிடம் காண்பித்துள்ளார்.

எனினும் சந்தேக நபர், மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்ய கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக காவல்துறையினர் விசாரணைகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.