இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.
"பாதுகாப்பு காரணங்களுக்காக" மூன்றாம் தரப்பினரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி (Sino Soar Hybrid Technology) எனும் சீன நிறுவனம் இது தொடர்புடைய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
🇨🇳Sino Soar Hybrid Technology, being suspended to build Hybrid Energy system in 3 northern islands 🇱🇰 due to 'security concern' from a third party, has inked a contract with Maldivian gov't on 29 Nov to establish solar power plants at 12 islands in 🇲🇻.https://t.co/ZhnETZYN6P
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) December 1, 2021