பிரியந்த குமாரவின் கொலை அடிப்படைவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான அடிப்படைவாதங்கள் குறித்து மத தலைவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள அனைத்து இலங்கையர்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் அந்நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
-எம்.மனோசித்ரா