தனது பயணத்தின் ஒரு அங்கமாக அவர், இந்தோனேஷியாவிலிருந்து இவ்வாறு இலங்கை வந்துள்ளார். இலகுரக விமானத்தில், உலகைச் சுற்றி வந்த மிக இளம் வயது விமானியாக ஸாரா கருதப்படுகிறார்.
இந்த பயணத்தின் போது, அவர் தனது விமானத்தை 52 நாடுகளில் தரையிறக்க திட்டமிட்டுள்ளார் என்றும், பூமத்திய ரேகை ஊடாக இரண்டு உலகை சுற்றிவர எதிர்பார்த்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனூடாக, 30 வயதான அமெரிக்க விமானியான ஷெஸ்டா வயிஸ் 2017 ஆம் ஆண்டு புரிந்த சாதனையை முறியடிக்க ஸாரா முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
பிரித்தானிய விமானிகளின் குடும்பத்திலிருந்து வந்த சாரா, தனது 14 வயதில் விமானியாக தனது முதல் அனுபவத்தைப் பெற்றதுடன், 2020 ஆம் ஆண்டில் தனது 17 ஆவது வயதில் விமானம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றார்.
உலகின் அதிவேக இலகுரக விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷார்க் யூ.எல் விமானத்தில் அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் போது, ஸாரா அட்லாண்டிக் வழியாக கிறீன்லாந்து, கனடா, தென் அமெரிக்கா வழியாக அலாஸ்காவுக்குச் சென்று அங்கிருந்து ரஷ்யா மற்றும் இந்தோனேசியாவுக்கு பயணிக்கவுள்ளார்.
அதன்பின்னர் அவர் தனது சாகசப் பயணத்தை ஐரோப்பா நோக்கி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி பெல்ஜியத்தின் ரஸல்ஸ் நகரில் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய ஸாரா, இன்னும் மூன்று மாதங்களில் அதனை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளார்.