தொழிநுட்ப வளர்ச்சி; இனி தொலைக்காட்சி திரையை நக்கிப் பார்த்து சுவையை அறியலாம்!

தொழிநுட்ப வளர்ச்சி; இனி தொலைக்காட்சி திரையை நக்கிப் பார்த்து சுவையை அறியலாம்!


தொலைக்காட்சியின் திரையில் தோன்றும் உணவுப்பொருட்களை நக்கிப் பார்த்து அவற்றின் சுவையை அறிந்து கொள்ளக் கூடிய விதத்தில் ஒரு புதிய தொழிநுட்பத்துடன் கூடிய திரையை ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியாஷிடா கண்டுபிடித்துள்ளார்.

'டேஸ்ட் தி டிவி' என்று அழைக்கப்படும் இந்த தொலைக்காட்சி திரையின் மீது ஹைஜீன் ஃபிளிம் என்று அழைக்கப்படும் ஒருவித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்பட்டு, அதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும்.

இதன் மூலம் சுவையை நக்கி உணர்ந்து கொள்ள முடியும் என பேராசிரியர் கூறியுள்ளார்.

வீட்டில் இருந்த படியே உலகின் மறு முனையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவத்தை சாத்தியப்படுத்துவது தான் இந்த தொழில்நுட்பத்தின் இலக்கு என கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் இது போன்ற தொழில்நுட்பம் மூலம் வெளி உலகத்துடன் தொடர்பு மேற்கொள்ளுவதை மேம்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.