தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் போன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சுப் பதவிகளை எதிர்பாராது சேவையாற்ற வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தான் சார்ந்த இனத்தை விற்பனை செய்து அரசியல் செய்யக்கூடாது எனவும், தேசிய கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தியே தேர்தல்களில் போட்டியிடவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது எப்போதும் ஒரு கொள்கையிலேயே பயணிப்பது பாராட்டுக்குரிய விடயம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கட்சிகளில் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கத்துவம் வகித்தால் மாத்திரமே, சிறுபான்மையின தேவைகளுக்கு தீர்வை பெறலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டாலும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே குரல் எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளங்களை விற்றல் உள்ளிட்ட நாட்டுக்கு எதிரான விடயங்களுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் பின்வாங்காது எனவும் பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவி தமக்கு கிடைத்திருந்த போதிலும், மலையக ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டதன் காரணமாகவே அந்த கட்சியில் இருந்து தாம் வெளியேறியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.