பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில், அவர் பயணித்த தனியார் விமானம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Blue Embraer Legacy 600 Business Jet என்ற விமானம் இந்திய தொழிலதிபர் ஒருவருடையது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானம் பிரதமரின் நெருங்கிய நண்பர் ஒருவரால் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும் குறித்த வர்த்தகரின் பெயர் தனக்கு தெரியாது என பிரதமரின் தலைமை செயல் அதிகாரி யோஷித ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விமானம் பிரதமரின் 23ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஜயத்திற்காக கடந்த 16ஆம் திகதி ஆபிரிக்க நாடான உகாண்டாவில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தது விமானம் புறப்படும் வரை எந்த இடத்திலும் இது தொடர்பில் எந்த ஆதாரமும் இல்லை.
பின்னர் பிரதமருடனான விமானம் இரத்மலானையிலிருந்து திருப்பதிக்கு டிசம்பர் 23ஆம் திகதி புறப்பட்டது. அதே நாளில் விமானம் மீண்டும் புதுடெல்லிக்கு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, இந்த விமானத்திற்கான சராசரி மணிநேர வாடகை ஒரு மணி நேரத்திற்கு 6,700 அமெரிக்க டொலர்கள் ஆகும். (யாழ் நியூஸ்)