அமைச்சர் பிரசன்ன ரணதுங்க காணி மோசடி செய்துள்ளதாக தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ரஜீவி டி சில்வா எனும் பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அரசு நிலங்களை அபகரித்துள்ளதாகவும், அதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள அவர், இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் சட்டத்தரணி மூலம் இவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதில் அமைச்சருக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்காக 50 கோடி ரூபாவை 14 நாட்களுக்குள் நட்டஈடாக செலுத்துமாறும், அவ்வாறு செலுத்தாவிடின் அதற்குப் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)