விசாரணை அறிக்கையை பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பாததற்காக முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர்களை பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை எனவும் ரத்தன தேரர் மேலும் சுட்டிக் காட்டினார்.
மேலும், இது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மக்கள் மத்தியில் மறக்க வைக்க வைத்தியர் ஷாபி தொடர்பான சர்ச்சையை மீண்டும் மக்கள் மத்தியில் தூண்டிவிடும் அரசியல் நாடகங்களில் ஒன்று என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். (யாழ் நியூஸ்)