பல வருடங்களாக யால வனப்பகுதியில் மறைந்திருந்த நபர் கைது!

பல வருடங்களாக யால வனப்பகுதியில் மறைந்திருந்த நபர் கைது!

யால வனப்பகுதியில் மறைந்திருந்த நபர் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பல வருடங்களாக யால வனப்பகுதியில் தலைமறைவாக இருந்ததாகவும், பல கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம் பொலிஸாரால் பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக கதிர்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களின் பிரதான சந்தேகநபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் யால வனப்பகுதியில் மறைந்திருந்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யால வனத்தில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடி பாரியளவிலான இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

2011ஆம் ஆண்டு கதிர்காமம் 20 ஏக்கர் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜுலை மாதம் கதிர்காமம் நாகஹா தெரு பகுதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக இந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

-தெரென 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.