லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு எரிவாயுவின் தரம் குறித்து ஊடகங்களைத் தொடர்ந்து ஏய்ப்பதாக ஆளும் கட்சியால் அவர் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் கேள்விக்குரிய சூழலுக்கு முகங்கொடுக்க முடியாத பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கமாக தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)