ரிசாட் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை! நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் கவலை!

ரிசாட் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை! நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் கவலை!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் அறிவித்துள்ளது.

ரிஷாட் பதியுதீனின் கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பாக விசாரணை நடாத்தி, குறித்த விடயம் தொடர்பான தனது முடிவை நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக பதவிவகித்த  காலப்பகுதியில் , உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு உதவியமை  மற்றும் உடந்தையாக செயற்பட்டார்  என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ரிஷாட் பதியுதீன்  சார்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உடனடியாக பரிசீலிக்காத நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக குறித்த ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன்,  06 மாதங்களுக்குப் பிறகு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், அவரை சந்தேக நபராக கருதுவதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதற்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறித்த ஒன்றியும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால், ரிஷாட் பதியுதீனின் முறைப்பாடு நியாயமானது என தாம் கருத வேண்டியுள்ளதாக, நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, உலகின் 179 தேசிய பாராளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய நாடாளுமன்ற சபைகளின் அங்கத்துவத்துடன், நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.