வீடு புகுந்து நீதவானை தாக்கிய கொள்ளையர்கள்!

வீடு புகுந்து நீதவானை தாக்கிய கொள்ளையர்கள்!

நீதவான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நீதவானை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஒருவரின் வீட்டின் யன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நீதவானை தாக்கிவிட்டு அவரின் மனைவியின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளதாக அக்கரைப்பற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

நீதவான் அக்கரைப்பற்று வை.எம்.சி. வீதியில் உள்ள அவரின் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

வீட்டின் யன்னலை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் உறக்கத்தில் இருந்த நீதவானின் மனைவியின் தாலிக்கொடியை அறுத்தபோது சத்தம் கேட்டு உடன் எழுந்த நீதவான் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது அவரின் கைகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கொள்ளையர்கள் 11 பவுண் தாலிக்கொடியுடன் தப்பி ஓடியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை இந்த பகுதியில் கடந்த வாரம் இரு வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் உறக்கத்தில் இருந்த இரு பெண்களின் தாலிக்கொடிகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை கொள்ளையர்களை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.