ஜனவரி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயம்!

ஜனவரி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டரை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் வாடகைத் தேவைகளுக்காக இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஜனவரி 15 ஆம் திகதிக்குள் டாக்சி மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது மாகாணத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படாததால் சாரதி தான் நினைத்தபடி கட்டணத்தை அறவிடுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.