அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் பசில் நாடு திரும்பியதும் அரசாங்கத்திற்குள் பல பெரிய மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
நிதியமைச்சர் இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட நெருக்கடியின் பின்னர், அவர் அமெரிக்கா சென்றதாக ஊடக செய்திகள் வெளியாகி இருந்தன.
அத்துடன் பசில் ராஜபக்ச புறப்பட்டுச் செல்லும் முன்னர், அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தி இருந்தார் எனவும் செய்திகள் உறுதிப்படுத்தியிருந்தன.