நாளை முதல் ஒருவருக்கு 10 கிலோ அரிசி மாத்திரமே அனுமதி!

நாளை முதல் ஒருவருக்கு 10 கிலோ அரிசி மாத்திரமே அனுமதி!


சதொச விற்பனையகங்களில் நபர் ஒருவர் ஒரே தடவையில் 10 கிலோ கிராம் அரிசியை நாளை (27) முதல் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் நபரொருவர் 10 கிலோ கிராம் அரிசியினை ஒரு தடவையில் கொள்வனவு செய்ய முடியும்.


இதற்கு முன்னதாக நுகர்வோருக்கு ஒரே தடவையில் 05 கிலோ கிராம் அரிசியினை கொள்வனவு செய்ய கூடியதாக இருந்தது.


தற்போது, அதனை 10 கிலோ கிராம் வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதேவேளை, சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தே காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


பண்டாரவளை, பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் இன்மையினால் வர்த்தகர்களும், நுகர்வோரும் பாரிய அசௌகரியத்தினை எதிர்நோக்கியிருந்தாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.