திருத்தங்களுடன் எதிர்வரும் 29ஆம் திகதி புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் சிறிய அளவில் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டி - அக்குறனை பகுதியில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளினதும், பேருந்து நடத்துனர்களினதும் நன்மை தொடர்பில் சிந்தித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதற்கமைய, குறைந்த அளவான திருத்தங்களுடன் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.