ஹஜ் மற்றும் உம்ரா செல்லவிருக்கும் பயணிகளுக்கு மேலும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி!

ஹஜ் மற்றும் உம்ரா செல்லவிருக்கும் பயணிகளுக்கு மேலும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி!


டிசம்பர் மாதம் முதல், ஹஜ் மற்றும் உம்ரா உள்ளிட்ட பயணங்களுக்காக சவூதி அரேபியாவுக்கு பயணிக்கும் நபர்களுக்கான "நோய் எதிர்ப்பு" நிலை விதிமுறைகளின் வரையறைக்கு சவூதி சுகாதார அமைச்சகம் மாற்றத்தை வெளியிட்டது.

ஹஜ் மற்றும் உம்ரா வருகையின் நோக்கத்திற்காக சவூதி வருபவர்களுக்கான கீழ்வரும் மாற்றத்தை பொது சுகாதார ஆணையம் (வெகாயா) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

அதன்படி, டிசம்பர் 01, 2021 அமுலுக்கு வரும்வகையில் சினோபார்ம், சினோவாக் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் ஜனவரி 1, 2022 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வந்து சேர்ந்து 48 மணிநேரங்களுக்குப் பிறகு எதிர்மறையான பிசிஆர் சோதனை முடிவும், மூன்று நாள் நிறுவன தனிமைப்படுத்தலும் இருக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியது.

இந்த புதிய தடுப்பூசிகள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியது, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட தடுப்பூசிகளில் இரண்டு டோஸ் ஃபைசர், மோடெர்னா, அஸ்ட்ராசெனெகா மற்றும் ஒரு டோஸ் ஜான்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் அடங்கும். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.