அஹுங்கல்ல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐந்தரை கிராம் ஹெரோயினுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுகுருந்தவில் வைத்து கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் கடமையில் ஈடுபட்டிருந்த போது போதைப்பொருளை ஏற்றிக்கொண்டு கட்டுகுருந்த பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மூன்றரை வருடங்களாக சேவையில் உள்ளதாகவும், விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். (யாழ் நியூஸ்)