நுவரெலியாவில் பனி மூட்டம் - 5 பாகை செல்சியஸ் வெப்பநிலை!

நுவரெலியாவில் பனி மூட்டம் - 5 பாகை செல்சியஸ் வெப்பநிலை!

நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட பல இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்பட்டது.

நுவரெலியா பந்தய மைதானம், கோல்ஃப் மைதானம் மற்றும் நுவரெலியாவைச் சுற்றி தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில் உறைந்து போகிறது.

நுவரெலியா மாநகர சபை பிரதேசத்தில் காலை வெப்பநிலை 5 பாகை செல்சியஸாக குறைந்திருந்தது.

நுவரெலியாவில் பருவமழை ஆரம்பமாகி காலை வேளையில் மிகவும் குளிரான காலநிலை காணப்பட்டதுடன், நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியிலும் காலை வேளையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

நுவரெலியா பிரதேசத்தில் நிலவும் இக்கால நிலை மாற்றத்தினால் மரக்கறி செய்கையிலும் தேயிலை மற்றும் மலர்ச் செய்கையிலும் கடும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.