கொழும்பு - மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் இன்று (18) தீக்கிரையாகியுள்ளன.
இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இரண்டு வீடுகளின் தளபாடங்கள் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வீட்டின் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்பாக கடவுளுக்கு ஏற்றிய விளக்கை எரிய விட்டுவிட்டு சென்றதன் காரணமாக தீ பரவியிருக்கலாம் என்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதன்படி அந்த தீ மற்ற வீட்டிற்கும் பரவி சேதம் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை. (யாழ் நியூஸ்)