முல்லைதீவில் காணாமல் போயிருந்த 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!

முல்லைதீவில் காணாமல் போயிருந்த 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், இன்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி இன்று மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடலில் ஆடைகள் களையப்பட்டு, உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கை உடலில் இருக்கவில்லை. விலங்குகள் சேதப்படுத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை  புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட  நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

12 வயதுடைய குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார் இந்த சிறுமி திருகோணமலையில் விடுதியில் தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னர்தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

-சண்முகம் தவசீலன்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.