நாடு முழுவதிலும் உள்ள மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், சர்க்கரை நோய், அழற்சி எதிர்ப்பு மருந்துகள் உட்பட கிட்டத்தட்ட 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தில் நிலவும் சிக்கல் நிலையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)