யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர் யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் என தெரியவந்துள்ளது.
இறக்கும் போது அவருக்கு 51 வயது. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தென்னம் தோப்பிற்குள் அமைந்துள்ள வீடடடிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)