கடந்த 20-11-2021 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இப்பதிவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பதவியுயர்வின் மூலம் கலை கலாசாரப் பீடத்தின் இரண்டு பேராசிரியர்களைக் கொண்ட ஒரேயொரு துறையாக அரசியல் விஞ்ஞானத்துறை திகழ்கின்றமை பெருமைக்குரியதாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விஷேட கற்கையினைப் பூர்த்தி செய்த பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் அத்துறையில் முதல் வகுப்புப் பட்டத்தினைப் பெற்ற முதலாவது மாணவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.
தனது முதுகலைமாணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ள இவர், முரண்பாடு மற்றும் சமாதானக் கற்கையில் டிப்ளோமாப் பட்டத்தினையும் மனித உரிமைகள் மற்றும் சமாதானக் கற்கையில் டிப்ளோமாப் பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார்.
-சர்ஜுன் லாபீர்