ஓய்வு பெற்றோரை சேவையில் இணைத்துக்கொள்வது சம்பந்தமான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓய்வு பெற்றோரை சேவையில் இணைத்துக்கொள்வது சம்பந்தமான அறிவித்தல்!


நாட்டில் ஓய்வு பெறுவோரின் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு உள்ள அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதற்காக நிறுவக பிரதானியின் அனுமதி கட்டாயமாகுமென அரச சேவை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவு ஜனவரி முதலாம் திகதியாக இருந்த போதிலும், முன்மொழிவு முன்வைக்கப்பட்ட நவம்பர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறவுள்ள அதிகாரிகள் தொடர்பில் நிவாரணம் வழங்கப்படுமாயின் உரிய நடைமுறை தயாரிக்கப்பட வேண்டும் என்று ஓய்வூதிய திணைக்களம் அந்த அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த செயலாளர் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இந்த அதிகாரிகளை சேவையில் நியமிப்பதா இல்லையா என்பது தொடர்பாக எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.