ஹைட்டியில் பெட்ரோல் லாரி வெடித்ததில் 60 க்கும் மே‌ற்ப‌ட்டோ‌ர் பலி!

ஹைட்டியில் பெட்ரோல் லாரி வெடித்ததில் 60 க்கும் மே‌ற்ப‌ட்டோ‌ர் பலி!


ஹைட்டியில் (Haiti) பெட்ரோல் ஏற்றி வந்த லோரியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்த நிலையில், மேலும் ஏராளமானவா்கள் காயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து கேள்விகளுக்கு பொலிஸாா் பதிலளிக்க மறுத்து வருகின்றனா். எனவே, விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது குறித்து மேற்கொண்டு விவரங்கள் வெளிவரவில்லை.

லொரியில் வெடிவிபத்து ஏற்பட்டபோது அங்கு ஏராளமானவா்கள் வாளியில் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் காயமடைந்த ஏராளமானவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஊடகஙகள் தெரிவித்தன.

எரிபொருள் பற்றாக்குறையில் ஹைட்டி சிக்கித் தவித்து வரும் சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.