தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள அவர், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா செல்வதற்கு முன்னர் நிதியமைச்சர் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு அழைத்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.
வரவு செலவுத்திட்டம் இறுதி செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்த பின்னர் ஜனவரி 18 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.
அவர் இன்று அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)