நாட்டில் மின்சார மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகள் விலையில் ஏற்றம்!

நாட்டில் மின்சார மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகள் விலையில் ஏற்றம்!


மின்சார மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளின் விலைகள் சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ளன.


சமையல் எரிவாயு தொடர்பில் தற்போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் மாற்று நடவடிக்கையாக சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பினை கொள்வனவு செய்தமையினால் இவ்வாறு அவைகளினது விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.


2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றின் விலையானது தற்போது 8,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதேநேரம், புறக்கோட்டை மற்றும் புறநகர்பகுதிகளில் மண்ணெண்ணெய் அடுப்பு இல்லாமையினால் நுகர்வோரும், வர்த்தக நிலைய உரிமையாளர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.