திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்த மகனை அடித்துக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்த மகனை அடித்துக் கொலை!


திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்ட மகனை அவரது தந்தை அடித்து கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் பதிவாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது களவனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயியான கேசவன். இவரது மகன் 30 வயது சின்னமணி என்கிற சிவமணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மணி தினசரி குடித்துவிட்டு வந்து தாய், தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று (16) இரவு வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிவமணி தந்தையிடம் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தந்தை - மகன் ஆகிய இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் மகன் சிவமணியை தந்தை சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவமணி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். 

பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தனிப்படை பொலிசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தையான கேசவனை தேடி வருகின்றனர். தந்தையே மகனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை சுற்றுப்பட்டு கிராம மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.