சில நாட்களுக்கு தினசரி மின்வெட்டு - மின்சக்தி அமைச்சு

சில நாட்களுக்கு தினசரி மின்வெட்டு - மின்சக்தி அமைச்சு

சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை குறைந்தது ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை மின்வெட்டு நீடிக்கும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

"அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு, இலங்கையின் சில பகுதிகளில் சுமையை சமப்படுத்த சுமார் 1 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும்" என்று இலங்கை மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார். 

பொது மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியத்தை கருத்திற் கொண்டு, 'வொர்க் டு ரூள்' (விதிமுறையின் அடிப்படையில் வேலை செய்தல்) என்ற போராட்டத்தை, இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் நேற்று தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.